கே.எல்.ராகுலுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!?

இந்திய டெஸ்ட் அணிக்கான துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இடம்பிடித்தார். அதன்பிறகு சிறப்பாக விளையாடிய ராகுல் அண்மைக்காலமாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 71 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 17 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவருக்குப் பதில் சுப்மன் கில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கே.எல்.ராகுலுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறினார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல் பெயர் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.