75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம்: பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு


கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்த மோகனியா (65) என்ற மூதாட்டியும்,  75 வயதான பகவான்தின் என்ற முதியவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

75 வயதில் இரண்டாவது திருமணம்

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தின் தியோரி கிராமத்தை சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த மோகனியா என்ற 65 வயது மூதாட்டியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளியான பகவான்தின் ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம்: பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு | 65 Old Woman Married 75 Old Man In Madhya Pradesh

ஆனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது மோகனியா (65) என்ற மூதாட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதே சமயம் மோகனியா (65) என்ற மூதாட்டிக்கு இது முதல் திருமணமாகும்,  பகவான்தின் மற்றும் மோகனியா ஜோடி கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்ததையடுத்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அரசு திட்டத்தின் கீழ் திருமணம்

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த திருமணத்தை மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராம்கேலாவான் பட்டேல் முன்னின்று நடத்தி வைத்தார்.

75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம்: பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு | 65 Old Woman Married 75 Old Man In Madhya Pradesh

மேலும் திருமண ஜோடிக்கு அரசு ஏழைகள் திருமண திட்டத்தின் கீழ், ரூ.11 ஆயிரம் பரிசு பணத்தையும், ரூ34 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.