பாடசாலை செய்தி வெளியீடு ஊடக அமைச்சரிடம் கையளிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பாடசாலை செய்தி பருவ வெளியீடு, திணைக்களத்தின் உதவி செய்திப் பணிப்பாளர் ஹர்ஷ அபேகோனால் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டினைத் தொடர்ந்து இந்த வெளியீடு, கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.