ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது: புடின் உறுதி| Putin accuses West of stoking global war to destroy Russia

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: போரில் ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லாதது என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றுகையில் கூறியதாவது: போரை தவிர்க்க ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவை பெற்ற உக்ரைன்,

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா நகரை தாக்க முயற்சி செய்தது. உலகெங்கும் பல பகுதிகளில் குழப்பங்களையும் மோதலையும் மற்றும் போரையும் மேற்கத்திய நாடுகள் விதைத்துள்ளன. கீவ் ஆட்சியாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளால், உக்ரைன் மக்கள் பணைய கைதிகளாக மாறி உள்ளனர்.

அவர்கள் உக்ரைனை, அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமித்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை சர்வதேச மோதலாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. இதனை நாங்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

latest tamil news

ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சமூகத்தை பிளவுபடுததும் மேற்கத்திய முயற்சிகளுக்கு ரஷ்யா ஒரு போதும் அடிபணியாது. பெரும்பான்மையான ரஷ்யர்கள் போரை ஆதரிக்கின்றனர். உக்ரைன் மக்களுக்கு எதிராக இந்த போரை ரஷ்யா நடத்தவில்லை. அர்த்தமுள்ள வகையில் டான்பாஸ் நகர பிரச்னையை பேசி தீர்க்க முயற்சி செய்தோம்.

ரஷ்யா வந்து பாதுகாக்கும் என டான்பாஸ் நகர மக்கள் காத்திருந்தனர். ஆனால், பிப்., மாதத்தில் டான்பாஸ் நகர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்க உக்ரைன் தயாராக இருந்தது தெளிவாக தெரிந்தது. மேற்கத்திய நாடுகள் தான் போரை துவக்கின.

அதைத்தடக்க நாங்கள் எங்கள் சக்தியை பயன்படுத்துகிறோம்.

உக்ரைன் மீதான போர் தொடரும் எனக்கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்வதேச அளவில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையில், அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினர் பிரச்னையை தூண்டிவிட்டனர் இவ்வாறு புடின் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.