வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வார்சவ்: ”ரஷ்யாவால், ஒரு போதும் உக்ரைனை வீழ்த்த முடியாது”, என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
திடீர் பயணமாக உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு தனது பயணத்தை முடித்து கொண்டு போலந்து சென்றார். வார்சாவ் நகரில் அவர் ஆற்றிய உரை:
ரஷ்யா தாக்குதல் ஒராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், உக்ரைன் வலிமையுடன் போராடுகிறது. பெருமையுடன் நிற்கிறது. முக்கியமாக சுதந்திரத்திற்காக போராடுகிறது. நாடுகளின் இறையாண்மைக்காகவும், ஆக்கிரமிப்பு இல்லாமல் வாழும் மக்களின் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நாங்கள் நிற்போம். அதை செய்வோம். எந்த தடையாக இருந்தாலும், இந்த விஷயங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.
உக்ரைனை ஒரு போதும் ரஷ்யா வெற்றி கொள்ள முடியாது. போர் துவங்கிய ஒராண்டு கழித்து ரஷ்ய டாங்கிகள் உருள துவங்கி உள்ளன. உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் உள்ளது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ, ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ நினைக்கவில்லை. புடின் கூறியபடி, ரஷ்யாவை தாக்கும் திட்டம் ஏதும் மேற்கத்திய நாடுகளிடம் இல்லை. ரஷ்ய மக்கள், அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழ விரும்புகின்றனர். அவர்கள் எதிரிகள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement