சென்னை: தமிழ்நாட்டின் கனவுத் திட்டமான கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் மாற்றம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். தற்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து திட்டத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் வேறு இடத்தில் இருந்து திட்டம் தொடங்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. செங்கல்பட்டில் இருந்து திட்டம் தொடங்கப்பட்டால் சென்னை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.