சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நீட் விலக்கு விவகாரத்தில் ஆயுஸ் அமைச்சகம் கோரிய விளக்கங்கள், முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு தினங்களில் அனுப்பப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்.
கடந்த 2 ஆண்டுகளில் தனியார் மருத்துவ சேவைகளில் இருந்து விடுபட்டு, அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவ மனைகளுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் மருத்துவ சேவைகள் பெற, அரசு மருத்துவமனையை நோக்கி வரவேண்டும் என்பதே என் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement