திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று முன், புதுமணத் தம்பதிகள், வீட்டில் உள்ள அறைக்குள், உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிஜ்நகரில் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அறைக்குள் அலறல் சத்தம்
அஸ்லாம் (24) மற்றும் கஹ்காஷா பானோ (22) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) திருமணம் செய்து கொண்டனர், அவர்களின் திருமண வரவேற்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்தது. அவர்கள் தங்கள் அறைக்குள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது மணமகளின் அலறல்களைக் கேட்டு மணமகனின் தாய் அங்கு சென்று பார்த்தார்.
அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது, பல முறை அழைத்தும் அவர்கள் பதிலளிக்காதபோது, குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள், அவர்கள் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் கதவை உடைத்து, கத்தியால் குத்தப்பட்ட அவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அந்த இடத்திலிருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டது.
கொலை-தற்கொலை
“முதல் பார்வையில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் தாக்கி, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.