Mark Antony: பார்க்கும் போதே பதறுது… மார்க் ஆண்டனி ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… அதிர்ச்சி வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார். கடைசியாக விஷால் நடிப்பில் லத்தி படம் வெளியானது. லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

Subi Suresh: மீண்டும் ஒரு சோகம்… பிரபல நகைச்சுவை நடிகை திடீர் மரணம்!

ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Mayilsamy, Napolean: இது உலகத்துக்கே அடுக்காது.. ஏன் இவ்வளவு சீக்கிரம்? மயில்சாமி மரணத்தால் கலங்கிப் போன நெப்போலியன்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைட் வாகனம் திடீரென வெடித்து தானாக இயங்க ஆரம்பித்து படக்குழுவினர் நின்றிருந்த பகுதியில் நுழைந்தது. இதனை கவனித்த படக்குழுவினர் அலறியடித்தப்படி சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் படங்களில் இதுபோன்று தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெற்று வருகின்றன என கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், நல்ல வேலையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை, கடைசியில் இது படத்திற்காக எடுத்த காட்சி என்று கூறி விடாதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Mayilsamy, Mano Bala: ‘எனக்கு அந்த தைரியம் இல்ல… சொன்னதை மயில்சாமி கேட்கல’… நொறுங்கிப்போன மனோ பாலா! #Mayilsamy #Manobala #Mayilsamyde

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.