அதிமுகவில் அந்த மூன்று பேருக்கு ’நோ’… ஈரோடு கிழக்கில் ஜெயக்குமார் ஓப்பன் டாக்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு என லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாயை திமுக அரசு இதுவரை வழங்கவில்லை. இடைத்தேர்தல் வருவதை ஒட்டி இன்னும் ஐந்து மாதங்களில் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
.

உதயநிதி ஒரு குழந்தை

இதை எப்படி நம்புவது? செங்கல் நாயகன் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விற்கு விலக்களிப்பதாக கூறினார். ஒன்றும் செய்யவில்லை. உதயநிதி ஒரு குழந்தை போன்றவர். பண்பட்டவராக அவரை நான் பார்க்கவில்லை. நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இரட்டை இலைக்கு செல்வாக்கு

மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவினர் சர்வ அதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்.

திமுக ஆட்சியின் அவலம்

திமுகவினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எத்தனை முறை டெல்லி சென்றார்கள்? எத்தனை பேரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி இல்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

இரவில் அதிரடி கைது

’புளுகு மன்னன்’ என்ற பட்டம் கொடுப்பதாக இருந்தால் அது ஸ்டாலினுக்கு பொருந்தும். கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுப்பதற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடை மாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

அதிமுகவின் நிலைப்பாடு

திமுக அரசு கல்வி பாடத்திட்டத்தை பொதுப் பட்டியிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது தானே? அவர்கள் அவர் செய்ய மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை. மேலும்
ஓ.பன்னீர்செல்வம்
களத்திலேயே இல்லை.

அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்,
சசிகலா
, டிடிவி தினகரன் இவர்கள் மூன்று பேரை தவிர யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.