ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், பாவப்பட்ட காசு என்பதால் அதனை தான் கையால் வாங்க வில்லை என்று தெரிவித்த மதுப்பிரியர் ஒருவர், 5 ஓட்டு உள்ள தங்கள் குடும்பத்துக்கு மொத்தமாக சேர்த்து தனது மனைவி 15 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டதாக தெரிவித்த வீடியோ வெளியாகி உள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர பரிசு பொருட்களுடன் பண மழையை கொட்டி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , மாநகராட்சியில் தூய்மைப்பணியாளராக பணி புரிந்து வரும் மதுப்பிரியர் ஒருவர் ஓட்டுக்கு காசு வாங்கியது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுப்பதாகவும், அது பாவப்பட்ட காசு என்பதால் தன் கையால் அதனை தொடவில்லை என்றார், தங்கள் குடும்பத்தில் மொத்தம் 5 ஓட்டு என்பதால் மொத்தமாக 15 ஆயிரம் ரூபாயை தனது மனைவியிடம் கொடுத்ததாகவும் , அதனை பெற்றுக் கொண்ட அவர் தங்க நகை வாங்கியதாகவும் தெரிவித்தார்
பணம் வாங்குவதில் தான் வேறு, தனது மனைவி வேறு என்று தத்துவார்த்தமாக பேசிய அந்த மதுப்பிரியர் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து குதூகலித்தார்
ஒரு குவார்ட்டர் 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் , காலையில் இருந்து 3 குவார்ட்டர் வாங்கிக் குடித்த நிலையில் சப் என்று இருப்பதாக அந்த மதுப்பிரியர் ஆதங்கப்பட்டார்.