"அவதார் 4-ம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஹிரோஷிமா தொடர்பாக ஒரு படம் எடுப்பேன்!"- ஜேம்ஸ் கேமரூன்

கடந்த 2009-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான  இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

Avatar: The Way of Water

இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜேம்ஸ் கேமரூன் மூன்றாம் பாகத்தை உருவாகும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாகம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவதார் நான்காம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு சம்பவம் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘The Last Train From Hiroshima: The Survivors Look Back’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க விரும்புவதாக ஜேம்ஸ் கேமரூன்  தெரிவித்துள்ளார்.

James Cameroon

இதுதொடர்பாக தி லாஸ் ஏஞ்சலீஸ் டைமிற்கு பேட்டி அளித்த அவர், “நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிகவும் மோசமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘The Last Train From Hiroshima: The Survivors Look Back’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க விரும்புகிறேன். ஹிரோஷிமா சம்பவம் தொடர்பாகப் படம் எடுத்தால் அது காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவுறுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.