6 வயது நிரம்பினால் மட்டுமே, குழந்தைகளை இனி 1ஆம் வகுப்பு சேர்க்க முடியும் என்று மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அடிப்படை கல்வி என்பது, 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் எனப்படுகிறது.
இந்நிலையில், மழலையர் கல்விக்காக, மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
அதில் பள்ளிக் கல்வியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in