6 வயது நிரம்பினால் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்கை: மத்திய அரசு உத்தரவு| Education Ministry directs States, Union Territories to align age of admission for class 1 to 6 plus years

புதுடில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 6 வயது நிரம்பினால் மட்டுமே, ஒன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான 3 ஆண்டுகள் மழலையர் கல்வி கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் நாட்டில் மழலையர் கல்வி குறிக்கோளை அடைய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ‘நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதே நேரத்தில் மூன்று வயதில் குழந்தைகளைப் பிரிகேஜி உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கலாம், எல்கேஜி. யுகேஜி படிக்க அனுமதி உண்டு. ஆனால் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அந்த குழந்தைக்கு ஆறு வயது இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும். இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.