ஹோமாகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரத்தை அமைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தள்ளுப்பட்டு கீழே விழுந்துள்ளார்.