சட்டவிரோதமாக பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. பெற்றோர், செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்,  40 ஆயிரம் ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்பனை செய்ததாக குழந்தையின் பெற்றோர், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாரனேரி, ஈஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டீஸ்வரன்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் நான்காவதாக ஜனவரி மாதம்  பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை நாகர்கோயில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ் – ஐரின் தம்பதிக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தையின் பெற்றோர், இடைத்தரகர்களான செவிலியர்கள் அஜிதா, முத்துமாரியம்மாள், ஐரின் ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஜார்ஜை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.