சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்த நாள் முதல், அனைவரது பார்வையும் இந்த தொகுதி மீது விழுந்துள்ளது. ஆனால் ஏழு முறை எம்.பி.,யாக இருந்த மூத்த தலைவர் முனியப்பா கடுப்பாகி போனார்.
அவரை லாவகமாக பேசி, அவர் வாயாலேயே ஆதரவு தெரிவிக்க வைத்தார் சித்து. சமீபத்தில் தன் வீட்டுக்கு முனியப்பாவை வரவழைத்து உபசரித்தார்.
அப்போது, பெங்களூரின் மூன்று முக்கிய தொகுதிகளை குறிப்பிட்டு தனக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரும்படி நிபந்தனை விதித்தாராம்.
மறுப்பு தெரிவிக்காமல் சித்து ஏற்றுக் கொண்டதாகவும், கட்சியின் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் சமாதானப்படுத்தினாராம்.
இதன் மூலம், முனியப்பாவின் கோபத்தை தணித்து, தனது பருப்பை கோலாரில் வேக வைத்து கொள்வது சித்துவின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், முனியப்பா கேட்டுள்ள தொகுதியின் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இது, புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement