காதல் தோல்வியால் கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

காதல் தோல்வி காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹேமபிரியா என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் டிப்ளமா நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் கௌதம் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த மாணவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கௌதமுக்கும், ஹேமபிரியாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே காதல் தோல்வியால் ஹேமபிரியா சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த ஹேமபிரியா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த தாய் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் ஹேமபிரியா உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.