தாவணகரே மாநகராட்சி கூட்டம்  காதில் பூவுடன் வந்த காங்கிரசார்| The Congressman came to the Thavanagare Municipal Corporation meeting with flowers in his ears

தாவணகரே: தாவணகரே மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள், காதில் பூவை சொருகியவாறு வந்தனர்.

பெங்களூரு விதான் சவுதாவில் கடந்த 17ம் தேதி முதல்வர் பசவராஜ் பொம்மை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் காதில் பூக்களை சொருகி வந்திருந்தனர். இது, விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நேற்று தாவணகெரே மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் ஜெயம்மா கோபிநாயக்கா சார்பில், 557 கோடி ரூபாய் பட்ஜெட்டை நிலைக்குழு தலைவர் சோகி சாந்தகுமார் தாக்கல் செய்தார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்கள் காதில் செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களை வைத்திருந்படி, பங்கேற்றனர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகையில், ‘சொத்து வரி மூலம், 30 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வருகிறது. ஆனால், கூடுதல் வரிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மீது கூடுதல் வரி விதிப்பதை ஏற்க முடியாது’ என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.