தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தாவணி கனவுகள் படத்தில் துவங்கி பல வருடங்களாக 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களை கவர்ந்தார் மயில்சாமி.
அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரை போலவே தர்ம தலைவனாக இருந்துள்ளார். தன்னிடம் உதவி என கேட்டு வருவோர்க்கு ஓடோடி உதவி செய்யும் குணம் படைத்த மயில்சாமியை பலரும் போற்றி வருகின்றனர்.
Vignesh shivan: விஜய் சேதுபதியுடன் இணையும் சென்சேஷ்னல் ஹீரோ..டபுள் ஹீரோ சப்ஜெட்டுடன் களமிறங்கும் விக்கி..!
தன் கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கி உதவி செய்பவர் தான் மயில்சாமி என பல திரைபிரபலங்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவரின் இறுதி சடங்கில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு கண்ணீர் வடித்தனர்.அதில் ஒருவர் தான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
மயில்சாமியின் நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கர் தன் நண்பனின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுதார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் மயில்சாமியை பற்றி பேசினார் பாஸ்கர். அவர் கூறியதாவது, ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு மயில்சாமியை பார்த்தேன். என்னடா உடம்பு சரியில்லையா என கேட்டேன். அதற்கு அவர், ஆமாண்டா ஹார்ட் அட்டாக் என சிரித்துக்கொண்டே சொன்னான்.
என்னடா இவ்ளோ சீரியஸான விஷயத்தை சிரிச்சுகிட்டே சொல்ற என நான் கேட்க, அட விடுடா இதுவரைக்கும் மூன்று முறை ஆபரேஷன் பண்ணிட்டேன். அதையும் மீறி என்ன செய்யும்முடியும் என கூலாக மயில்சாமி பேசியதாக கூறினார் எம்.எஸ்.பாஸ்கர்.
மேலும் வீட்டில் நெஞ்சுவலிக்குதுனு சொன்ன மயில்சாமியை அவரது குடும்பம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தன் மகன் மடியிலேயே உயிரை விட்டுள்ளார் என மிகவும் எமோஷனலாக பேசினார் எம்.எஸ்.பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.