AK62: அந்த ஒரு விஷயத்தில் அஜித்தை இம்ப்ரெஸ் செய்த மகிழ் திருமேனி..!

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் கூட கடந்தாண்டே தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட அஜித் துணிவு படத்தில் நடிக்க சென்றார்.

தற்போது துணிவு படம் வெற்றிபெற்றதை அடுத்து அஜித் புது உத்வேகத்துடன் தன் அடுத்த படத்தில் நடிக்க தயாரானார். எனவே விக்னேஷ் சிவனை அழைத்து முழு கதையையும் கேட்ட அஜித்திற்கு கதை பிடிக்காமல் போனது. மேலும் லைக்கா நிறுவனமும் விக்னேஷ் சிவன் மீது அதிருப்தியில் இருக்க AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர்.

Vignesh shivan: விஜய் சேதுபதியுடன் இணையும் சென்சேஷ்னல் ஹீரோ..டபுள் ஹீரோ சப்ஜெட்டுடன் களமிறங்கும் விக்கி..!

இது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து AK62 படத்திற்கான இயக்குனரை தேடும் பணியில் அதி தீவிரமாக லைக்கா இறங்கியது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ஒரு வழியாக மகிழ் திருமேனியை AK62 படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில் மகிழ் திருமேனியின் கதையில் சில திருத்தங்களை செய்ய சொன்ன அஜித் சில பல கண்டிஷன்களையும் விதித்தார். அதாவது படத்தை ஐந்தே மாதங்களில் முடித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட வேண்டுமாம். மேலும் படத்தில் எந்த வித சர்ச்சைகளை ஏற்படுத்தும் காட்சிகளும் இருக்கக்கூடாதாம்.

இது போன்ற பல கண்டிஷன்களை அஜித் மகிழ் திருமேனிக்கு விதித்தார். அனைத்து கண்டிஷன்களுக்கும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே சொன்னார் மகிழ் திருமேனி. இதையடுத்து இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் நடைபெற்று விறுவிறுப்பாக பட வேலைகள் ஆரம்பமானது. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மகிழ் திருமேனி அஜித்தை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. மகிழ் திருமேனியின் வேலை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம். குறிப்பாக மகிழ் திருமேனி நடந்துகொள்ளும் விதத்தால் அஜித் பெருமளவில் இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.

எனவே சிறுத்தை சிவா, வினோத் வரிசையில் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் அஜித் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.