கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்
அதிமுக பொதுக்குழு விவாகரத்தில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது – உச்சநீதிமன்றம்
2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது
11.07.2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் தேர்வு உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை உருவாக்க, 11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, 11.07.2022 அன்று ஒற்றை தலைமையை வலியுறுத்தும் வகையில் தீர்மானம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் – பொதுக்குழுவில் தீர்மானம்
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், தலைமைக்கழகப் பொறுப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் எனத் தீர்மானம்
பொதுச்செயலாளர் பதவிக்கு, குறைந்தபட்சம் 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்; 10 மா.செ.க்கள் வழிமொழிய வேண்டும்