அதிகரித்த இ.பி.எஸ் பென்ஷன்… பெற என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சுற்றறிக்கை!

இ.பி.எஃப். ஊழியர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் தொகையுடன் 1995 முதல் பென்ஷனும் தரப்படுகிறது. சம்பள வரம்புக்கு உட்பட்டிருந்தது இ.பி.எஃப் பென்ஷன். 2014-ல் பென்ஷன் விதிமுறைகளில் திருத்தம் வெளியிட்ட, இ.பி.எஃப் அமைப்பு, சம்பள வரம்புக்கும் அதிகமாக பென்ஷன் பெற விரும்பும் சந்தாதாரர்கள் ஆறு மாத காலத்துக்குள் அதற்கான இசைவு (Option) தெரிவிக்க ஒரு கடைசி தேதியை (Cut off Date) நிர்ணயத்திருந்தது.

Provident Fund

ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத ஊழியர்கள் இ.பி.எஃப் நிறுவனம் நிர்ணயித்த தேதிக்குள் இசைவு தெரிவிக்கவில்லை.

கடந்த 04.11.2022 உச்ச நீதிமன்ற அமர்வு ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி அதிகரித்த பென்ஷன் பெற 03.03.2023-க்குள் இசைவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. இந்த தீர்ப்பு இத்தகைய ஊழியர்கள் இசைவு தெரிவிப்பதற்கு வழி செய்தது.

இந்த நிலையில், மேற்கண்ட தேதிக்குள், யாரெல்லாம் இசைவு தெரிவிக்கத் தகுதியானவர்கள் என்பதற்கு 20.02.2023 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது இ.பி.எஃப்.ஓ (EPFO)  நிறுவனம். இதன்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க பத்தி 11 (3) மற்றும் பத்தி 11 (4) ன் கீழ் ஊழியர்கள், தங்களது நிறுவனத்துடன் (Employer) இணைந்து இசைவு தெரிவிக்கலாம்.

Pension
  • இ.பி.எஃப் திட்ட பத்தி 26 (6) ன் கீழ், அப்போதைய சம்பள வரம்பான ரூ.5,000 மற்றும் ரூ.6,500 க்கும் அதிகமாக சந்தா செலுத்திய ஊழியர் மற்றும் நிறுவனத்தினர்.

  • இ.பி.எஸ். உறுப்பினராக இருந்தும் சட்டத் திருத்தத்துக்கு முந்தைய பத்தி 11 (3) ன் கீழ் இசைவு தெரிவிக்காதவர்கள்.

  • 01.09.2014-க்கு முன்பே இ.பி.எஸ் உறுப்பினராக இருந்து 01.09.2014 க்குப் பிறகும் உறுப்பினராக தொடர்ந்து இருப்பவர்கள்

மேற்கண்டபடி 31.08.2014 அன்று உறுப்பினராக இருந்தும் அதிகரித்த பென்ஷன் பெற இசைவு தெரிவிக்காதவர்கள் 03.03.2023 தேதிக்கு முன் இசைவு தெரிவித்து விடலாம்.

விண்ணப்பிக்கும் முறையும் நிபந்தனையும்

1. இ.பி.எஃப். ஆணையரகம் குறிப்பிட்டுள்ள படிவத்தில் மட்டுமே இசைவு தெரிவிக்க வேண்டும்.

 2. இணை இசைவு (Joint Option) படிவத்தில் குறிப்பிட்டுள்ள பொறுப்பு துறப்பு (Disclaimer) மற்றும் உறுதிமொழி (Declaration) உடன் இருக்க வேண்டும்.

 3. பிராவிடண்ட் ஃபண்டிலிருந்து பென்ஷன் ஃபண்டுக்கு தேவையான பங்கை மாற்றவும், பென்ஷன் ஃபண்டுக்கு மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதிருந்தாலும் அதற்கான சம்மதம் இணை இசைவில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

PF

4. விலக்கு பெற்ற பிராவிடண்ட் ஃபண்டிலிருந்து, இ.பி.எஃப்.ஓ  ஃபண்டுக்கு நிதி (Fund transfer) மாற்றம் செய்வதற்கு அந்த (நிதியத்தின்) டிரஸ்டியின் வாக்குறுதி (undertaking)  சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட வாக்குறுதியானது, கட்ட வேண்டிய சந்தா மற்றும் சந்தா செலுத்தப்படும் தேதி வரைக்குமான வட்டியுடன் குறிப்பிட்ட தேதிக்குள் சந்தா செலுத்தப்படும் என்பதையும் தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.

5. விலக்கு பெறாத நிறுவன ஊழியர்களின் நிறுவன பங்கு ரீஃபண்ட், இ.பி.எஃப் விதிமுறை 1952 -ன் பத்தி 60 -ல் தெரிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்துடன் டெபாசிட் செய்யப்பட வேண்டும். தொகை செலுத்தப்படும் தேதி வரை வட்டி கணக்கிடப்பட வேண்டும்.

பிஎஃப்

6. பணம் எவ்வாறு  டெபாசிட் செய்யப்பட வேண்டும் (Method of Deposit) என்பதும் பென்ஷன் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதும் அடுத்து வரும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படும்.

7. அப்போதைய சம்பள வரம்பான ரூ.5,000/ரூ.6,500 க்கு மேல் நிறுவனத் தரப்பு பங்களிப்பு செலுத்தியதற்கான ஆதாரத்துடன் இ.பி.எஸ். திட்ட விதிமுறை பத்தி 26(6) ன் கீழ் இணை இசைவு (Joint Option) க்கான ஆதாரமும் உள்ளடக்கியதாக இணை இசைவு இருத்தல் வேண்டும். இதனை நிறுவனம் நன்கு பரிசீலித்து சரியென்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இணை இசைவு சமர்ப்பித்தவுடன்…

இணை இசைவு (Joint Option) குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டபின் அவை பிராந்திய (Regional P.F.Comissoner) பி.எஃப். கமிஷனரால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ரசீது எண் (Receipt Number) விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

உச்ச நீதிமன்றம்

மூன்றாவது சுற்றறிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 29.12.2022  மற்றும் 05.01.2023  ஆகிய தேதிகளில் இது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தாலும் தற்போதைய சுற்றறிக்கை தெளிவாக உள்ளதாக கருதப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை விரைந்து அமலாக்கம் செய்திட மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பும் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது. என்றாலும், இது தொடர்பாக அடுத்த சுற்றறிக்கையும் வந்த பின்னர் தான் அதிகரித்த பென்ஷன் பெறுவதற்கான நடவடிக்கை இறுதி வடிவம் பெறக்கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.