மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை| Liquor Policy Irregularity: Enforcement Directorate probes Delhi Chief Minister Kejriwals aide

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை இன்று(பிப்.,23) விசாரணை நடத்தினர்.

latest tamil news

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் இந்த புதிய கொள்கை குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினா் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து, 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

latest tamil news

புதுடில்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா, கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்ததால், அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கு குறித்த அடுத்த கட்ட விசாரணைக்காக பிப்.,27ம்தேதி ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு, சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை இன்று(பிப்.,23) விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,அமலாக்க இயக்குனரகத்தின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. பா.ஜ.,வின் கீழ் அமலாக்கத்துறை செயல்படுகிறது எனக் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.