2023 Royal Enfield Interceptor 650, Continental GT 650 – புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 அறிமுகம்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலாய் வீல் சேர்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக புதிய நிறங்கள், எல்இடி லைட்டிங், ட்யூப்லெஸ் டயர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் புதிய சுவிட்ச் கியர்களை கொண்டுள்ளது.

என்ஜின் தொடர்பில் மாற்றம் இல்லாமல் 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

2023 Royal Enfield Interceptor 650, Continental GT 650

இன்டர்செப்டர் 650, தற்போதுள்ள Mark 2, Sunset Strip மற்றும் Canyon Red ஆகிய வண்ணங்களுடன் கூடுதலாக பிளாக் ரே மற்றும் பார்சிலோனா ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். கான்டினென்டல் ஜிடி 650 இரண்டு புதிய பிளாக் அவுட் பெயிண்ட் நிறங்களில் ஸ்லிப்ஸ்ட்ரீம் ப்ளூ மற்றும் அபெக்ஸ் கிரே ஆகியவற்றை பெற்றுள்ளது.

மற்றபடி, பொதுவாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட கருப்பு அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட், USB சார்ஜர் மற்றும் சுவிட்ச் கியர் மற்ற புதிய RE மாடல்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள் அலாய் வீல் பதிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். மற்ற மாடல்களை விட விலை 6000 முதல் 7000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.