முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு
பி வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து 2005ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‛சந்திரமுகி'. 18 ஆண்டுகளுக்கு பின் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க, ஆர்ஆர்ஆர் புகழ் எம்எம் கீரவாணி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கலாட்டான போட்டோக்கள், வீடியோக்கள் ஏற்கனவே இதற்கு முன்பு வெளியாகின. இப்போது லாரன்ஸ், வடிவேலு குறும்புத்தனம் செய்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டு, ‛‛முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்…!'' என குறிப்பிட்டு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு, சந்திரமுகி 2 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.