திறமை இருந்தும் உதவ ஆள் இல்லை.. உதவிக்கரம் கேட்கும் தடகள வீரர்.!

திறமை இருந்தும் ஏராளமான  இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில்  சாதிக்க முடியாமல் இருப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கிறது. சில வீரர்கள் வறுமையை கடந்தும் தங்களது திறமையால் சாதித்த சம்பவங்களும் இங்கே நடைபெற்று இருக்கின்றன.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சார்ந்த தடகள வீரர் பிரபாகரன் என்பவர் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பல சாதனைகளைப் புரிந்து இருக்கிறார். சர்வதேச அளவில் வெளிநாடுகளில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஸ்பான்சர் கிடைக்காததால் நீலகிரியில் தைலம் காய்ச்சும்  பணி செய்து வருகிறார்.

தேசிய அளவில் 25 இருக்கும் மேற்பட்ட போட்டிகளில் பதக்கங்களை வாங்கி குவித்திருக்கும் இவரது வீடு முழுவதும்  வெற்றி பெற்ற கோப்பைகளும் பதக்கங்களும் மெயின் அருவி இருக்கின்றன ஆனாலும் இவருக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஸ்பான்சர் செய்ய யாரும் முன் வரவில்லை.

தமிழக அரசும் ஸ்பான்சர்களும் முன்வந்து தனக்கு உதவி செய்தால்  சர்வதேச அளவில் இந்தியாவிற்காக  பெயர் வாங்கி தருவேன் என்று கூறி இருக்கிறார் பிரபாகர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள அரசாங்கம் மற்றும் ஸ்பான்சர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த வருங்கால சாதனை நாயகன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.