குடிவரவு குடியகல்வு வளாகத்திற்கு வரும் மக்களின் வசதிக்காக இருக்கைகள்

 

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை அமைக்க நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மேற்கொண்ட கள.ஆய்வுக்குப் பின்னர்  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால், மரங்களின் கீழ், சுவர்களுக்கு மேல், வீதிகளில் அமர்ந்து விடுகின்றனர்.

இதற்கு தீர்வாக அந்த இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 முனீரா அபூபக்கர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.