புதுச்சேரி: விரைவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்படுகிறது. இதன் ஆய்வுப் பணிகளுக்காக செக் குடியரசிலிருந்து வாங்கப்பட்ட சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தடைந்தது.
புதுச்சேரியிலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விரைவில் புதுச்சேரியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறிய ரக விமானத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய விமானத்துறை திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து ஆய்வு பணிகளுக்காக செக் குடியரசு நாட்டில் இருந்து வாங்கப்பட்ட சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தடைந்தது.
இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.