ஸ்மார்ட்போன் உலகில் இந்த ஆண்டு செப்டம்பர் அறிமுகம் ஆகப்போகும் Apple நிறுவனத்தின் புதிய
iPhone 15 மாடல்
இதுவரை இருந்த ஐபோன் மாடல்களிலேயே மிக அதிகமான பேட்டரி ஆயுள் கொண்டிருக்கும்.
இந்த வசதி இல்லாமல் OLED டிஸ்பிலே, 28nm Process மூலம் உருவாக்கப்பட்ட புதிய டிஸ்பிலே டிரைவர் இடம்பெற்றுள்ளது. இந்த 28nm சிப் குறைந்த அளவு பேட்டரி மட்டுமே உறிஞ்சும் என்பதால் இதன் பேட்டரி அதிக நேரம் நீடிக்கும்.
இந்த போனில் 6.2 இன்ச் டிஸ்பிலே மற்றும் Dynamic island வசதி உள்ளது. இதில் முதல் முறையாக USB-C கனெக்டர் வசதி இருக்கும். இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் Lightning Port மட்டுமே இருந்துவந்தது. இந்த போனின் அமைப்பு கிளாஸ் மற்றும் மெட்டல் பிரேம் கொண்டு உருவாக்கப்படும். இதன் பின்பக்க கேமரா அதிக அகலம் கொண்டிருக்கும்.
கூடுதல் வசதிகளாக WiFi-6E Network இருக்கும் என்றும் இது Macbook போலவே இருக்கும். இந்த புதிய போன் சிகப்பு நிறத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15, iPhone 15 plus, iPhone 15 Pro, iPhone 15 Ultra ஆகிய வேரியண்ட்கள் வெளியாகும்.
இதில் Dynamic island மற்றும் USB Type-c போர்ட் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A17 Bionic Chip வசதி இடம்பெறும். இதன் ப்ரோ மாடல்களில் Titanium Frame, Solid State Volume மற்றும் Power Button போன்ற வசதிகள் உள்ளன.
தற்போது ஆப்பிள் ஐபோன் 14 மாடல் இந்தியாவில் 79,900 ஆயிரம் ரூபாய், ஐபோன் 14 மேக்ஸ் 89,900 ஆயிரம் ரூபாய், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1,39,900 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்