கர்நாடகா தேர்தல் 2023: முஸ்லீம்கள் வாக்கு செலுத்த முடியாது; பாஜகவின் பக்கா பிளான்.!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் 224 சீட்கள் இருக்கின்றன. இதில் 113 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தல் களத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக அமைந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி கட்டிலில் ஏறியது.

இந்த கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அரசு டெண்டர்கள், ஹிஜாப், மதமாற்ற தடை சட்டம், பெங்களூரு உள்கட்டமைப்பு கோளாறுகள் என பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்தநிலையில் நடப்பு ஆண்டு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தென்னிந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. பாஜக ஆட்சியமைத்தது முதலே கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் முஸ்லீம் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்காமல் போகும் என அக்கட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்கு செலுத்த முடியாத நிலையை பாஜக உருவாக்கி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவின் சிவாஜிநகர் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பாஜக செயல்பாட்டாளர்களின் சர்ச்சைக்குரிய புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 26 ஆயிரம் போலி வாக்காளர்கள் தொகுதியில் இடம் பெயர்ந்தவர்கள் அல்லது இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக பாஜக அனுதாபிகள் குற்றம் சாட்டினர். இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், புகாரின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, 9,159 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கத் தொடங்கினர். இந்த நடவடிக்கை செப்டம்பர் 13, 2021 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) மீறுவதாகக் கருதப்படுகிறது.

“ஒரு அரசியல் கட்சியால் தாக்கல் செய்யப்படும் புகார், அதுவும் திரளான பெயர்களுடன், ஒரு சிறப்பு சூழ்நிலை எப்படி இருக்கிறது?” என்று பீப்பிள் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் கேட்டுள்ளார்.

ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், டி.ரூபா ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர்; சீக்ரெட் போட்டோ லீக்… கர்நாடக அரசு அதிரடி!

பெங்களூருவின் மையப்பகுதியில் உள்ள சிவாஜிநகரில் சுமார் 1.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 40% முஸ்லிம்கள். 2008 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வருகிறது. 2022 அக்டோபரில் 26 ஆயிரம் வாக்காளர்களை பட்டியலிட்ட பாஜக அனுதாபிகள், தனிப்பட்ட முறையில் புகார் அளித்ததன் மூலம் சர்ச்சை தொடங்கியது. இந்த பட்டியலை ஒரு தனியார் குழு எப்படி கைப்பற்றியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.