ஜப்பானின் டோக்கியோ- ஹனேடா விமான நிலையத்திலிருந்து, ஹக்டாகுவில் உள்ள ஃபுயோகா விமான நிலையத்துக்கு வரும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக புறப்படும் நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கிறது. 10 மணிக்கு வர வேண்டிய விமானம், 10.10-க்கு வந்தடைந்தது. அந்த விமான நிலையத்தின் விதிமுறைப் படி, 10 மணிக்கு மேல் வரும் விமானங்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, சுமார் 1000 கி.மீ தூரம் திருப்பி அனுப்பப்பட்டது.
இது குறித்து ஜப்பான் செய்தி நிறுவனம்,” பிப்ரவரி-19, 06.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், எந்தவித முறையான காரணமுமின்றி இரண்டு மணி நேரம் தாமதமாக 08.00 மணியளவில் புறப்பட்டது. சுமார் 1000 கி.மீ தூரம் கடந்து ஃபுகயோகா விமான நிலையத்துக்கு, 02.10 மணிநேரத்தில் வந்தடைந்தது. ஆனால் ஹனேடா விமான நிலைய விதியின்படி, அங்கு இரவு 10 மணிக்கு மேல் வரும் விமானத்துக்கு அனுமதி கிடையாது. காரணம் அந்த இடத்தின் காலநிலை மற்றும் அங்கிருக்கும் மக்களின் தூக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது. விமானம் கன்சாய் விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்பிவிட்டு, மீண்டும் ஹனேடா விமான நிலையத்துக்கு வந்ததால், கால தாமதமானதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே கிட்டத்தட்ட 335 பயணிகளைக் கொண்ட இந்த விமானம் மீண்டும் 5 மணிநேர இடைவெளியில் கிட்டதட்ட 1000 கி.மீ பயணம் செய்து, பிப்ரவரி-20, அதிகாலை 02; 50 மணியளவில், டோக்கியோ விமானம் நிலையம் வந்தடைந்தது. இதனால், ஜப்பான்.ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது பயணிகளுக்கு அன்றிரவு தங்குவதற்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொடுத்தது.
மேலும் OAG – Official Airline Guide-ன் அறிக்கையின் படி, நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும் விமானங்களில், ஜப்பான் ஏர்லைன்ஸ் உலகளவில் இரண்டாம் இடத்ததில் உள்ளது.
மேலும் உலகளவில் டோக்கியோ விமான நிலையம், நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும் விமான நிலையங்களில் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி ஜப்பானின் மெட்ரோ, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துத் தளங்கள் தான் உலகளவில் குறித்த நேரத்தில், சரியாக இயங்கும் போக்குவரத்துத் தளமாகக் கருதப்படுகிறது.