ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கரும், வெள்ளி பொருட்களும், ஸ்மார்ட் வாட்சுகளும், ஆயிர கணக்கில் பணத்தையும், கொலுசையும் திமுக, அதிமுகவினர் லஞ்சமாக கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பந்தல் அமைத்து தின்தோறும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு உணவு விருந்துடன் 500 ரூபாய் பணம் வழங்படுவதாகவும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரி, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரவி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள், இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதே சமயத்தில், நாம் தமிழர் கட்சி புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.