காலை உணவைத் தவிர்ப்பதால் மனித உடலில் நோய் எதிர் சக்தி குறைவதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு
தற்போதைய கால சூழலில் பலரும் காலையில் வேலைக்கு அவசரமாக ஓடுவதால் காலை உணவை உண்பதில்லை.
சிலர் பசியின்மையால் காலை உணவைச் சரியாக எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவர்கள் பலரும் காலை உணவின் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்ணாவிரதத்தால் இதய நோய்
நியூயார்க்கிலுள்ள இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பிலிப் ஸ்விர்ஸ்கி கூறுவதாவது, “உண்ணாவிரதம் ஆரோக்கியமானது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, மேலும் உண்ணாவிரதத்தின் நன்மைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் ஆய்வின் படி உண்ணாவிரதம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
எலிகளை வைத்து சோதனை
காலை உணவு அவசியமானதா என்பதனை பற்றித் தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து சோதனை நடத்தினர். இதில் ஒரு எலிக்கு காலை உணவை வழங்கினர். மற்றொரு எலிக்கு காலை உணவை வழங்காமலும் நான்கு மணி நேரம் கழித்து அவற்றின் ரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதித்தனர்.
@getty images
இதில் காலை உணவைத் தவிர்த்த எலியின் ரத்தப் பரிசோதனையில் மோனோசைட்டுகள் எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததாக கண்டுபிடித்தனர்.
ரத்த அணுக்களின் குறைபாடு
இந்த ரத்த அணுக்களின் குறைபாட்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கான திறன் குறையும் என்றும் இதுவே இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு காரணமாக இருக்குமென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
@health.clevelandclinic.org
ஆனால் காலை உணவை உண்ட எலியின் ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இருந்திருக்கிறது. எனவே காலை உணவின் அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து பல ஆய்வின் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.