விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான மாசி பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் மயானக் கொள்ளை திருவிழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான மாசி பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா ஒருவர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி செஞ்சி அருகே கோடி கொள்ளை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி தேரோட்டம் #Vilupuram #Melmalayanur #Angalaparameshwari #Trichy #TamilNadu #trichycity #trichydistrict #thuraiyur #thayar_info #3dpromo #livetrichy #live_trichy #woraiyur #thillainagar #srirangam #samayapuram pic.twitter.com/xVsFd6Kv0s
— live_trichy (@live_trichy) February 24, 2023