தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக அரசு பள்ளி ஆசிரியரை சிபிஐ அதிகாரிகள் சற்றுமுன் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன் மீது வரி ஏய்ப்பு, கூட்டு சதி உள்ளிட்ட புகார்கள் எழுந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு, கூட்டு சதி செய்ததாக 120 (B) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ராமச்சந்திரனை இன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். ராமச்சந்திரனை மதுரை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர்.