எடப்பாடி வசமான அதிமுக; ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க, எடப்பாடி வசமானது.

ஓ.பி.எஸ்.

இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறிவருகின்றது. இதற்கிடையில், மக்களிடம் நீதி கேட்கப்போவதாகவும், அதற்கான வேலைகளைக் கூடிய விரைவில் தொடங்கப்போவதாகவும் ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்தார்.

இத்தகைய நெருக்கடியான சூழலில், ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து எடப்பாடி வசம் வந்திருக்கிறது அ.தி.மு.க. இனி ஓ.பி.எஸ்ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `புதிய கட்சி தொடங்குவார்’, `சசிகலா டிடிவியோடு இணைவார்’, `பா.ஜ.க ஆதரவாளராக செயல்படுவார்’ என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக 49 சதவிகித பேர், ஓ.பி.எஸ் `பா.ஜ.க ஆதரவாளராக செயல்படுவார்’ என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக 43 சதவிகித பேர், `சசிகலா, டிடிவியோடு இணைவார்’ என்றும், 8 சதவிகித பேர்`புதிய கட்சி தொடங்குவார்’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

இதேபோல் விகடன் வலைதளப்பக்கத்தில் தற்போது நடந்துவரும் கருத்துக்கணிப்பில், “மதத்தின் அடிப்படையிலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ மக்களிடம் பா.ஜ.க பாகுபாடு காட்டுவதில்லை என்று மோடி பேசியிருப்பதை ஏற்கிறீர்களா?” என்ற கேள்விக்குப் பதிலளிக்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.vikatan.com/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.