சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதியுடன் கெடு முடிவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், பின்னர், ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி 28ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து […]