வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டைச் சேர்ந்த 45 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. எலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் அல்லது வேலூர் தண்டு கத்தரி என்று அழைக்கப்படும் ஊதா, பிங்க் மற்றும் பச்சை நிறம் கலந்த கத்தரிக்காய் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்யப்படுவது தமிழ்நாடு அரசு நில விவர பதிவேட்டின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரசு வழக்கறிஞர் பி. […]