மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக் வாகன அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல்..!

மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக்கின் வாகன அணிவகுப்பு மீது மேற்குவங்கத்தில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூச் பிஹார் தொகுதி எம்பியான அவர், அங்குள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கும்பல் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் நடத்திய கும்பலை கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கட்டுப்படுத்தினர். எல்லை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில், பழங்குடியின இனத்தவர் ஒருவர் பலியான சம்பவத்தில் நிசித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.