ஊராட்சி மன்ற தலைவர் குறித்து விசிக பிரமுகர் அடித்த போஸ்டரில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் விழுப்புரம் அருகே அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அகூர் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்துக்கு எதிராக விசிகவினர் போஸ்டர் ஒட்டியதால், சம்மந்தப்பட்ட இரு தரப்புக்கு மோதல் வெடித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் என்பவரின் பேரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், 100 நாள் வேலைத் திட்டத்தில் லஞ்சம், விவசாய நிலங்கள் அபகரிப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் விவகாரம் தொடர்பாக விசிகவினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பை சேர்ந்தவளுக்கு இடையே சமாதானம் செய்யச் சென்ற போலீசார் முன்னிலையில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.