Simbu: கல்யாண விஷயத்தில் சிம்புவுக்கு அப்படியே நயன்தாரா ராசி

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சிம்பு தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

சிம்புவின் தம்பி, தங்கைக்கு எல்லாம் திருமணமாகிவிட்டது. ஆனால் 40 வயதான சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைத்து மணக்கோலத்தில் பார்க்க அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷாவும் ஆசைப்படுகிறார்கள்.

சிம்புவுக்கு பெண் தேடும் படலம் நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் தான் சிம்புவுக்கும், இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின.

அண்ணனுக்கு ஒரு வழியாக திருமணம் நடக்கப் போகிறது என சிம்பு ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. சிம்புவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. அவருக்கு திருமணம் நிச்சயமானால் நாங்களே மீடியாவிடம் சொல்கிறோம் என சிம்பு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சிம்புவுக்கு நிச்சயம் நடக்கவில்லை என்கிற தகவல் அறிந்த சமூக வலைதளவாசிகளோ, அவருக்கு நயன்தாரா ராசி என்கிறார்கள். முன்னதாக நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தபோது அவர்களுக்கு திருமணம் என அடிக்கடி வதந்தி பரவி வந்தது.

எங்களுக்கு தற்போது திருமணம் இல்லை. திருமணம் நிச்சயமானால் நானே முதல் ஆளாக அறிவிப்பு வெளியிடுவேன் என்றார் விக்னேஷ் சிவன். அப்படியும் அவர்களின் திருமணம் பற்றிய வதந்திகள் மட்டும் நிற்கவில்லை. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது நயன்தாரா திருமண வதந்தியாகத் தான் இருந்தது.

நயன்தாராவுக்கு திருமணம் என்று எப்படி அடிக்கடி வதந்தி பரவியதோ, அதே போன்று தான் தற்போது சிம்புவுக்கும் நடக்கிறது. அதனால் தான் சிம்புவுக்கு நயன்தாரா ராசி என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தின் ஹீரோயின் நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. சிம்புவும், நிதியும் சென்னையில் லிவ் இன் முறைப்படி வசித்து வருவதாகவும் பேச்சு கிளம்பியது.

சிம்புவுக்கும், நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என நிதி அகர்வால் தரப்பில் இருந்து விளக்கம் அளித்தார்கள்.

சிம்புவின் வாழ்க்கையில் காதல் வருவதும் போவதுமாக இருக்கிறதே தவிர, அது திருமணம் வரை வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha: இன்று சிம்பு, த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் நாள்: நீங்க ஏன் கணவன், மனைவியாகக் கூடாதுனு கேட்கும் ரசிகாஸ்

சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும், ஜூனியர் எஸ்.டி.ஆரை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சிம்பு தன் தங்கை இலக்கியாவின் மகனுடன் சேர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும்போது எல்லாம் குட்டி சிம்புவை பார்க்க ஆவலாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

கெரியரை பொறுத்தவரை பத்து தல படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. அந்த படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் டிராமாவான பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான Mufti படத்தின் ரீமேக் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.