பாகிஸ்தான், இலங்கைக்கு கடன் தந்து கவிழ்க்கும் சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை| China overturns loans to Pakistan, Sri Lanka: US warns India

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், இலங்கைக்கு சீனா கடனுதவி அளிக்க முன்வந்திருக்கலாம் என அமெரிக்கா

எச்சரித்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.

தேவையான உதவி

இந்நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஜி – ௨௦ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மார்ச் ௧ – ௩ வரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென் இந்தியாவுக்கு வரவுள்ளார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்டு லுா நேற்று கூறியுள்ளதாவது:இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அந்த நாடுகள் தங்களுடைய சொந்த முயற்சியால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது.

அதே நேரத்தில் வெளியில் இருந்து வரும் நிர்ப்பந்தங்கள் நெருக்கடிகளுக்கு சிக்காமல் சொந்தமாக முடிவு எடுக்கும்படி இந்நாடுகளுக்கு கூறி வருகிறோம்.இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், இலங்கைக்கு சீனா

கடனுதவி அளிக்க முன்வந்திருக்கலாம்.சீனா விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். சமீபத்தில் சீனாவின் உளவு பலுான் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்பின்னும் இந்தியாவுடன் இந்த விவகாரம் தொடர்பாக பேசினோம்; இது தொடரும்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய ‘குவாட்’ அமைப்பு ஒரு ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பு அல்ல. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்வதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுஉள்ளது.

ராணுவ நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ளது போர் தான். அதை ராணுவ நடவடிக்கை என்று கூற முடியாது. இந்தியாவும் இதை போர் என்றே குறிப்பிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி,

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்களுடைய பேச்சில் இதை போர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.