இந்திய உறவு: அமெரிக்கா பெருமிதம்| Indian Relations: Americas Pride

வாஷிங்டன் : ‘இந்திய ராணுவத்துடனான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா ராணுவத்தின் தலைமையகமான ‘பென்டகனின்’ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட்ரிக் ரைடர் கூறியதாவது: இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ராணுவ ரீதியிலான சிறந்த நட்பு உள்ளது; இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

1997ல் இந்தியா – அமெரிக்க ராணுவம் இடையே பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மிக குறைவாகவே இருந்தது. தற்போது இந்த வர்த்தகத்தின் மதிப்பு, 16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அமெரிக்காவிடமிருந்து ராணுவ ரீதியிலான உதவியை எதிர்பார்க்கும் நாடுகளுக்கு இந்தியா மிகச் சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறது.இவ்வாறு கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.