மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமண சடங்களின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மணப்பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

உயிரிழந்த மணப்பெண்

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஹெட்டால் என்ற மணப்பெண்ணுக்கும், நரி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் விஷாலுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடைபெற்று வந்தது.

அப்போது மணப்பெண் ஹெட்டால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஹெட்டால் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் | Gujarat Bride Dies During Wedding RitualsExpress News Service

உறவினர்களின் மாற்றுத் திட்டம்

ஹெட்டலின் மரணத்தால் அவரது குடும்பம் தூக்கத்தில் இருந்த போது, பாதியில் நிற்கும் திருமண கொண்டாட்டங்களை தொடர்ந்து நடத்த உறவினர்கள் மாற்று திட்டத்தை முன்மொழிந்தனர்.

அதனடிப்படையில் மணமகள் ஹெட்டால் இடத்தில் அவரது சகோதரியை மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து, அவரது தங்கையுடன் திருமண சடங்குகளைத் தொடர்ந்தனர். 

மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் | Gujarat Bride Dies During Wedding Rituals

அதே சமயம் திருமண விழா விழா முடியும் வரை ஹெட்டலின் உடல் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, பாவ்நகர் நகர கார்ப்பரேட்டரும், மால்தாரி சமாஜ் தலைவருமான லக்‌ஷ்மன்பாய் ரத்தோர் இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.