பள்ளி செல்வதை தடுக்க…பெண் சிறுமிகளுக்கு ஊட்டப்படும் விஷம்! உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்


ஈரானில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக அந்த நாட்டின் அமைச்சர் மறைமுகமாக அறிவித்துள்ளார்.


பெண் குழந்தைகளுக்கு விஷம்

ஈரானின் தெஹ்ரானில் உள்ள புனித நகரான கோமில்(Qom) பெண்களுக்கான கல்வியை நிறுத்தும் நோக்கில், பள்ளிச் சிறுமிகளுக்கு சிலர் விஷம் ஊட்டுவதாக ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நவம்பர் பிற்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சுவாச நச்சு வழக்குகள் பள்ளி மாணவிகளிடையே பதிவாகி வருவதாகவும், அவற்றிலும் குறிப்பாக தெற்கு தெஹ்ரானின் உள்ள கோமில் நகரில் அதிகப்படியான வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதில் சிலருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது என்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி தெரிவித்துடன், விஷம் வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் அமைச்சர்  பனாஹியை மேற்கோள்காட்டி IRNA மாநில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “கோம் நகர பள்ளிகளில் பல மாணவர்கள் விஷம் குடித்த பிறகு, அனைத்து பள்ளிகளும் அதிலும் குறிப்பாக பெண்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

பள்ளி செல்வதை தடுக்க…பெண் சிறுமிகளுக்கு ஊட்டப்படும் விஷம்! உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர் | Girls Poisoned To Stop Them From Going To SchoolTweeted by/MonfaredAshkan


நீதி விசாரணை

இந்த சம்பவங்கள் குறித்து அமைச்சர் விரிவாக பேசாத நிலையில், இதுவரை விஷ மருந்துகள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

அமைச்சரின் கருத்துக்கு அடுத்த நாள் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி பஹதோரி ஜரோமி, உளவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகங்கள் விஷம் கலந்ததற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வாரம், வழக்கறிஞர் ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி இந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  

பள்ளி செல்வதை தடுக்க…பெண் சிறுமிகளுக்கு ஊட்டப்படும் விஷம்! உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர் | Girls Poisoned To Stop Them From Going To SchoolANSA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.