மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

மார்ச் 1 முதல் புதிய விதிகள்: பிப்ரவரி மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. மார்ச் 1 முதல், பல புதிய விதிகள் அமலுக்கு வரும். அவை உங்கள் மாதாந்திர நிதிநிலையை பாதிக்கலாம்.  மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும். அதே நேரத்தில், சில ரயில்களின் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். மார்ச் மாதத்தில் எந்தெந்த புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதையும் அவை உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வங்கிக் கடன் விலை உயரக்கூடும்

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதற்குப் பிறகு பல வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது கடன் மற்றும் இஎம்ஐயை நேரடியாக பாதிக்கும். கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக சாமானியர்களுக்கு இஎம்ஐ நெருக்கடி அதிகமாகலாம். 

எல்பிஜி மற்றும் சிஎன்ஜி விலைகள் அதிகரிக்கலாம்

எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும். கடந்த முறை எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், இம்முறை இது அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.