Lokesh Kanagaraj, Leo: அசுர வளர்ச்சி… பல கோடி ரூபாயில் புதிய அப்பார்ட்மெண்ட் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ்குறும்படங்களை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். பின்னர் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்ததை அடுத்து இரண்டாவது படமாக கார்த்தியின் கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
​ டான்சர்னா சும்மாவா.. 40 வயதிலும் அசர வைக்கும் ஷ்ரேயா!​
லோகேஷ் கனகராஜ் சம்பளம்இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் கமல்ஹாசனின் விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்தன. குறிப்பாக விக்ரம் 2 திரைப்படம் கமல்ஹாசனின் எந்த படமும் செய்யாத அளவுக்கு வசூலை குவித்தது. உலக அளவில் இந்தப் படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் லோகேஷ் கனகராஜ்ஜின் மார்க்கெட் கன்னாபின்னாவென எகிறியுள்ளது. ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
​ Simbu: இலங்கை பெண்ணை திருமணம் செய்கிறாரா நடிகர் சிம்பு? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!​
லியோதற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
​ Leo, Trisha: ‘லியோ’ படத்திற்காக த்ரிஷா வாங்கும் சம்பளம் இவ்வளவுதானா? ​
புதிய அப்பார்ட்மெண்ட்அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சென்னை கேகே நகரில் உள்ள பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கியுள்ளாராம். இந்த அப்பார்ட்மெண்டில் ஹைடெக்கான ஆபிஸும் பிரம்மாண்டமான வீடும் உருவாகி வருகிறதாம். லோகேஷ் கனகராஜுக்கு ஏற்கனகே சென்னை போயஸ் கார்டனில் ஒரு வீடு இருப்பதா கூறப்படுகிறது. இந்நிலையில் கேகே நகரில் பல கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அசத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
​ Mayilsamy: அப்பா இறந்தத அம்மாக்கிட்ட சொல்லவே இல்ல… கலங்க வைத்த மயில்சாமியின் மகன்!​
விஜய் ஆபிஸ் போலநடிகர் விஜய்யின் ஆபிஸை போன்றே தனது ஆபிஸையும் தயார் செய்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜின் அசுர வளர்ச்சியை பார்த்து பிரமித்து போயுள்ளனர் கோலிவுட்காரர்கள். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், கமலின் விக்ரம் 3, கார்த்தியின் கைதி 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார். மேலும் பாலிவுட்டிலும் தடம் பதிக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், சல்மான் கானிடம் கதை சொல்லியிருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ​ Devayani: தேவயானிக்கு அவ்வளவு டார்ச்சர் கொடுத்தார்… பிரபல இயக்குநரை கிழித்து தொங்கவிட்ட விஜயலட்சுமி!​
Lokesh Kanagaraj

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.