ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா காலமானதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு Votingமையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாதோர் வீல்சேர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வாக்களிக்கின்றனர்.

தேர்தலை ஒட்டி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குசாவடிகள் என அடையாளம் காணப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருன்றனர்.

வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் வாக்குச்சாவடி மையங்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது இளைய மகனுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பேசிய இளங்கோவன், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கே தான் வாக்குப்பதிவு செய்ததாக கூறி கலகலப்பூட்டினார். மேலும், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறிய இளங்கோவன், அழியும் வகையில் மை வைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன், பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும், தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.