NEET PG: நீட் முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்குமா? நடக்காதா?

NEET PG 2023: நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று, பிப்ரவரி 27, 2023 அன்று தொடரும். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பது தொடர்பான மனுக்களை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. மார்ச் 5 என ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தேர்வெழுத வேண்டிய மாணவர்கள் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

பலரின் கோரிக்கைகளை ஏற்று, நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடரவிருக்கிறது.  நீட் முதுகலை நுழைவுத்தேர்வுக்கான தேதி, மார்ச் 5 என ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது

மருத்துவர்கள் கோரிக்கை
NEET PG 2023 ஐ ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி, மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டெல்லிய்ல் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் (FAIMA) பதாகையின் கீழ் மருத்துவர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். 

நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒடிசா மருத்துவர்கள், அத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், NEET PG 2023 ஒத்திவைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தொடரவிருப்பதால், ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு, மார்ச் ஐந்தாம் தேதியன்று நடைபெறுமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.  

 தேர்வெழுத வேண்டிய மாணவர்கள் ஏற்கனவே அதற்குத் தயாராகி வருவதாகவும் கூறினார். இந்த நீட் முதுகலை நுழைவுதேர்வை மேலும் தாமதப்படுத்தினால், வேறு பல தேர்வுகளில் பாதிப்பு ஏற்படும் என்று என்றும் சுகாதார அமைச்சர் மக்களவையில் தெரிவித்திருந்தார்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.